வெள்ளித்திரையில் நல்ல நல்ல திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் ஆனால் அந்த படம் பணம் பிரச்சனையால் வெளியாகாமல் இருக்கும் அந்த வகையில் தற்போது வெளியாகாமல் இருக்கும் திரைப்படங்களில் லிஸ்ட் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து உருவான திரைப்படம் தான் துருவ நட்சத்திரம் இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள் ஆனால் இந்த படம் பணம் பிரச்சனையால் அப்படியே இருக்கிறது.
அதேபோல்தான் செல்வராகவனின் இயக்கத்தில் எஸ். ஜே சூர்யா நடிப்பில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் பணம் பிரச்சனையால் வெளியாகவில்லை.
மேலும் காஜல் அகர்வால் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் பாரிஸ் பாரிஸ் இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வைரலாகி வந்தது ஆனால் இந்த திரைப்படமும் பண பிரச்சனையால் முடங்கிவிட்டது.
அதேபோல் விஷ்ணு விஷால் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் தான் ‘இடம் பொருள் ஏவல்’ இந்த படம் ஒரு சில ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கிறது.
மேலும் இத்தனை திரைப்படங்கள் வெளியாகாமல் இருக்கிறது என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.