தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவி,சன் டிவி,ஜீ தமிழ்,கலர்ஸ்-தமிழ் இந்த நான்கு தொலைக்காட்சிகள் தான் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது.
அதோடு கதை மிகவும் வித்தியாசமாக இருக்கும் சீரியல்களை இயக்கி வருகிறார்கள். பல கவர்ச்சியில் ஆர்வமுள்ள புதிய முக நடிகைகளையும் அறிமுகப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை சீரியல்களின் மீது ஈர்க்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் அந்த சீரியல் நடிக்கும் நடிகைகளின் சும்மா இல்லாமல் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதன் மூலம் இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்கிறார்கள். எனவே ரசிகர்களும் அவர்கள் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் நடித்து வரும் சீரியல்கள் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் கொரானா காரணத்தால் சில மாதங்கள் சீரியல்கள் மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டது அந்த வகையில் சில மாதங்கள் சீரியல்கள் ஒளிபரப்பாகாமல் இருந்து வந்தது. பிறகு தற்போது தான் சில மாதங்களாக சீரியல்களில் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்தவகையில் சில சீரியல்கள் அப்படியே ஒளிபரப்பாமல் நிறுத்தப்பட்டது. சில சீரியல்கள் புதிதாக அறிமுகமானது. சில சீரியல்கள் முழுவதும் கதை மாற்றத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் அனைத்து சீரியல்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளார்கள் ஆனால் தமிழ்நாட்டில் இல்லையாம் மகாராஷ்டிராவில்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் சீரியல்கள் மற்றும் திரைப்பட படப்பிடிப்புகள் என்று எவ்வித படப்பிடிப்புகளும் நடக்கக்கூடாது என்று அரசு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழ்நாட்டிலும் கொரோனா தாக்கம் அதிகரித்தால் கண்டிப்பாக தமிழ் சீரியல்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்படும்.