தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்கள் நடிகர் ரஜினி மற்றும் கமல் இவர்களுக்கு அடுத்தபடியாக இருக்கும் நடிகர்கள்தான் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் கிடையாது. அப்படி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காத அளவிற்கு தங்களுடைய படத்தின் கதையை ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகர் அஜித் அவர்கள் ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே எச் வினோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக தற்போது துணிவு திரைப்படத்தின் மூலம் நடிகர் அஜித் அவர்கள் இணைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியாக காத்திருக்கிறது. இதேபோல நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து விஜய் அவர்கள் வம்சி இயக்கியுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த இரண்டு படங்களின் அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பில் வெளியான அப்டேட்டுகள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் டிரைலர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் டைலரில் ரிலீஸ் தேதியை அறிவிக்காத படக்குழுவினர் நேற்று தங்களின் படங்களின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக நேற்று இரண்டு படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர். அந்த வகையில் இரண்டு திரைப்படமும் ஒரே தினத்தில் நேரடியாக மோத உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் போட்டி நிலவி வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க விஜய் அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது துணிவு மற்றும் வாரிசு படத்தின் ரிலீஸ் அன்று ரசிகர்கள் ஷோ கிடையாது என்று தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலும் விஜய், அஜித் படங்கள் என்றாலே அதிகாலை 1 மணி 4 மணி ஷோக்கள் ரசிகர்களுக்காக ஒதுக்கப்படும் ஆனால் இந்த முறை எவ்வளவு டிக்கெட் விலையை ஏற்றினாலும் அந்த அளவிற்கு காசு கொடுத்து வாங்க ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள் இதனால் வாரிசு மற்றும் துணிவு படத்தின் அதிகாலை ஷோவை 8 மணிக்கு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் விஜய், அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் விஜய், அஜித் ரசிகர்களுக்கு பயந்து ஒரு சில திரையரங்கு உரிமையாளர்கள் துணிவு, வாரிசு படம் ரிலீஸ் ஆகும் தினத்தை முன்னிட்டு ஒரு சில தினங்களுக்கு முன்பு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று காவல்துறையில் மன அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.