Leo Movie : இந்த ஆண்டு வெளிவந்த டாப் ஹீரோக்களின் படங்கள் அதிக நாட்கள் ஓடி வசூலில் புது புது சாதனை படைத்து உள்ளன. அந்த வகையில் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று 600 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது.
அதனைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் இதுவரை மட்டுமே 700 கோடிக்கு மேல் அள்ளி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் கூட ரசிகர்கள் மத்தியில் பட்டையை கிளப்பி வருகிறது இதுவரை மட்டுமே 30 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது.
இந்த படங்களை தொடர்ந்து விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதுவரை படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் நான் ரெடி பாடல் போன்றவை வெளிவந்த நிலையில் லியோ போஸ்டர் நேற்று கோலாகலமாக வெளியானது. அடுத்ததாக இசை வெளியீட்டு விழா, ட்ரைலர் போன்றவற்றையும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இதனால் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டு வருகிறது நிச்சயம் லியோ படம் வெளிவந்து உலக அளவில் 1000 கோடி வசூல் செய்யும் என பலரும் கூறிக்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் லியோ படத்திற்கு முதல் நாளே மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி காத்திருப்பதாக பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அவர் சொன்னது என்னவென்றால்.. அரசு விதிமுறைப்படி லியோ படத்தின் காட்சி 9 மணிக்கு தான் என ஏற்கனவே கூறப்பட்டது ஆனால் தயாரிப்பாளர்கள் அதிகாலை காட்சிக்கு அரசிடம் கேட்டுள்ளனர் ஒருவேளை அதிகாலை காட்சி இல்லை என்றால் லியோ படத்தின் தமிழக வசூலில் முதல் நாளில் கிட்டத்தட்ட 40 சதவீதம் அடி வாங்கும் கூறியுள்ளார். பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..