பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் நடித்து வந்த நடிகர் தற்போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.இந்த தகவல் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சித்ரா உயிரிழந்தார் இவரைத் தொடர்ந்து அதே சீரியலில் இன்னொரு நடிகர் என்பதால் அந்த சீரியலுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.
அந்த வகையில் வெள்ளித்திரையில் காமெடி நடிகராக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் நெல்லை சிவா. இவர் மற்ற நடிகர் நடிகைகளைப் போலவே வெள்ளி திரையில் நடித்து பிரபலமடைந்த விட்டு தனது இறுதி காலத்தில் சின்னத்திரையில் நடித்து பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வந்தார்.
அந்த வகையில் இவர் பல முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படங்களையும் நடித்து சினிமாவில் காமெடி நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்நிலையில் இன்று மாலை 60:30 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இத்தகவல் ரசிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் என்று அனைவரையும் பெரும் சோகத்தில் ஏற்படுத்தி உள்ளது. எனவே அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இவர் வெள்ளித்திரையில் நடித்ததை விட சின்னத்திரையில் நடித்து பல ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.
எனவே சித்ரா இறந்ததைத் தொடர்ந்து தற்பொழுது இவரும் இருந்துள்ளதால் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என அனைவரும் பெரும் சோகத்தில் இருந்து வருகிறார்கள்.