20 வயது நடிகையை இரண்டு மாதங்களாக அழவிட்ட பிரபல இயக்குனர்.! பல வருடம் கழித்து உண்மையை உடைத்த நடிகை.!

manirathinam
manirathinam

shobana interview open talk : தமிழ்சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த், இவர் 1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையில் நடித்த திரைப்படம் தளபதி, இந்த திரைப்படத்தில் ஷோபனா, மம்முட்டி, அரவிந்த்சாமி, ஸ்ரீவித்யா என பலரும் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தின் கதாநாயகியான சோபனாவை இதுவரை யாரும் அறிந்திராத உண்மையை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார், தளபதி திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்கள் நடைபெற்றது அப்பொழுது எனக்கு வயது இருபது தான்.

நான் மிகவும் சின்ன பெண் என்னுடைய பெற்றோர்களை பார்க்கவேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தேன் ஆனால் படத்தின் இயக்குனர் மணிரத்தினம் இரண்டு மாதங்களாக என்னை வீட்டிற்கு அனுப்பவில்லை அதனால் படப்பிடிப்பு தளத்திலேயே கதறி கதறி அழுதேன் எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அவர் கதறி அழுத பொழுது ஷோபனாவை நடிகர் மம்முட்டி தான் பேசி சமாதானப்படுத்தி உள்ளாராம், மேலும் ரஜினியுடன் மீண்டும் இணைந்து சிவா படத்தில் சோபனா நடித்திருந்தார், அப்பொழுது ஒரு காட்சியில் ரஜினி மேற்கூரையை திறந்துகொண்டு படுத்திருக்கும் ஷோபனாவின் காலை பிடிப்பது போல் ஒரு காட்சி இருந்தது. ரஜினிகாந்த் அவர்கள் இந்தக் காட்சியை என் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என பிடிவாதமாக இருந்ததாகவும் பின்பு ரஜினிகாந்தை சமாதனப்படுத்தி அந்த காட்சி எடுக்கப்பட்டதாகவும் அந்த பேட்டியில் கூறினார்.

ரஜினி நினைத்ததுபோலவே ரஜினியின் ரசிகர்கள் தலைவா நீங்க போய் அவளோட கால பிடிக்கலாமா என திரையரங்கில் அலப்பரை செய்தார்களாம். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அந்த காட்சி வரும் போது பலரும் என்னை ஒடடினார்கள் என பழைய நினைவுகளை அந்தப் பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார் ஷோபனா.