விஜய் டிவியில் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவின் தன்னுடன் சக போட்டியாளர் ஒருவரை காதலிப்பதை மறைமுகமாக கூறியுள்ள நிலையில் இந்த சீசனில் அமீர் பாவணி இவர்களாக இருப்பார்களான நெட்டிசன்கள் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார்கள். அதாவது பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வரும் போட்டியாளர் தான் ஷிவின்.
தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி 35 நாட்களைக் கடந்துள்ள நிலையில் இதனை வைத்து ரசிகர்கள் இந்த சீசனின் டைட்டில் வின்னர் விக்ரமன் அல்லது ஷிவினாகத் தான் இருக்க வேண்டும் என கூறி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய உருக்கமான காதலை ரக்ஷிதாவுடன் பகிர்ந்து கொண்ட ஷிவின் அந்த காதலை தனது அம்மாவின் அறிவுரையின்படி வேண்டாம் என முடிவெடுத்ததாகவும் பிறகு நான் காதலித்த பையன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் அவருக்கு நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டால் எனக்கு போதும் எனவும் கூறி கண்கலங்கி இருந்தார்.
அதனை அடுத்து தற்போது இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான கதிரவனுடன் ஷிவினுக்கு கிரஷ் இருப்பதாக தெரிய வருகிறது. இந்த கிரஷை மறைமுகமாக கதிரவனிடம் சொல்லியும் அவரால் அதனை புரிந்து கொள்ள முடியவில்லை மேலும் எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் இருந்த அதாவது ஏற்கனவே கதிரவனை ஷெரினா காதலிப்பதாகவும் அதன் பிறகு கதிரவன் தான் தன்னுடைய கிரஷ் என்ற விஜே மகேஸ்வரி என கூறியதை பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த பட்டியலில் தற்போதைய ஷிவின் இணைந்திருக்கும் நிலையில் இந்த சீசனின் அமீர் பாவனியாக கதிரவன் ஷிவின் மாறுவார்களா என்பதை எதிர்பார்த்த ரசிகர்கள் காத்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வரையிலும் பெரிதாக காதல் சச்சரவுகள் இல்லாமல் இருந்து வரும் நிலையில் இந்த சீசனில் இது போன்ற பிரச்சனைகள் வெடிக்க இருக்கிறது.