முதல் முறையாக தன்னுடைய காதலைப் பற்றி கூறி கண்கலங்கிய ஷிவின்.!

bigg-boss-06
bigg-boss-06

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சிகள் 11 பெண் போட்டியாளர்கள், 9 ஆண்டு போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை ஆகியவர்கள் பங்குபெற்று மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும் திருநங்கையாக இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் ஷிவினுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் ஷிவின் மற்றும் ரச்சிதா மகாலட்சுமிக்கு இடையே நல்லவிதமான ஒரு நட்பு இருந்து வருகிறது. அந்த வகையில் ஷிவின் தனது வாழ்வில் வந்த காதல் அனுபவம் குறித்து தனது காதலன் குறித்தும் கண்களை பேசியிருக்கிறார்.

அதில் நான் ஐட்டியில் வேலை பார்க்கும் பொழுது ஒருவருடன் நட்பாக பழகினேன் நாளடைவில் அது காதலாக மாறியது எங்களது காதல் எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் நன்றாக தான் போய்க் கொண்டிருந்து அப்பொழுது நான் காதலிப்பதை அம்மா கண்டு பிடித்து கேட்டார்.

அதெல்லாம் வேண்டாம் அவங்க குடும்பத்திற்கு உன்னை பற்றிய விஷயம் தெரிந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அந்த குடும்பத்தின் சாபம் நமக்கு எதுக்கு வேண்டாம் என்று அம்மா அட்வைஸ் கொடுத்தாங்க அம்மா சொன்னதை யோசிச்சு அவர்கிட்ட சொன்னேன் இனி நம்ம பேச வேண்டாம் உனக்கு நல்ல வாழ்க்கை இருக்கு அந்த வாழ்க்கையை வாழ் என்று சொல்லிவிட்டு பிரித்து விட்டேன்.

அதன்பிறகு பலமுறை அவர் பேச முயற்சித்தார் ஆனால் நான் பேசவில்லை. இப்பொழுதாவது சிங்கப்பூரில் இருக்கிறார் அவர் கெட்ட பழக்கம் வச்சிருக்கிறாரு என்று கேள்விப்பட்டேன் இருந்தாலும் என்ன பண்ண முடியும் அவரோட வாழ்க்கை நல்லா இருக்கணும் நல்ல பொண்ணு அவருக்கு கிடைச்சா சந்தோஷமா இருந்தா உண்மையில் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் நான் அவரை மறந்துட்டு வாழ்வது கஷ்டம் தான் என்று தனது காதல் குறித்து கண்கலங்கி பேசிய உள்ளார் ஷிவின் கணேஷ்.