விஜய் டிவியில் மக்களின் கவனத்தை திசை திருப்பி அமோகமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் ஆறாவது சீசன் நேற்று கோலாகலமாக நிறைவடைந்தது. இதனை வழக்கம் போல் இந்த ஆறாவது சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி முடித்துள்ளார். இவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் மக்கள் பலரையும் கவர்ந்து இழுத்துள்ளது.
இது இந்த நிகழ்ச்சிக்கு பெரிய பிளஸ் ஆக பார்க்கப்பட்டது. அதனால் கமல் ரசிகர்கள் முதற்கொண்டு மக்கள் என பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டு களித்து வந்தனர். 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த ஆறாவது சீசனில் நேற்று கிராண்ட் பினாலே நடைபெற்றது.
அதில் பினாலே மேடையில் இறுதி மூன்று போட்டியாளர்களான விக்ரமன், சிவின், அசீம் போன்ற மூன்று போட்டியாளர்கள்.. இருந்தனர். இதில் அசீம் பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெற்றார் அவரைத்தொடர்ந்து முதல் ரன்னர் அப் விக்ரமன் மற்றும் இரண்டாவது ரன்னர் அப் சிவின் ஆனார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு திருநங்கை கலந்து கொண்டு..
இவ்வளவு தூரம் பயணித்தது மக்கள் பலரையும் வியக்க வைத்தது அதோடு மட்டுமல்லாமல் சிவின் தான் வெற்றி பெறுவார் என போட்டியாளர்கள் முதற்கொண்டு மக்கள் என பலரும் எதிர்பார்த்தனர். மேலும் இவருக்கென சோசியல் மீடியாவில் பல ரசிகர்கள் எல்லாம் உருவாகினர்.
இப்படி இருக்கையில் சிவின் டைட்டில் வின் செய்யாதது தான் சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடயே பிக் பாஸ் வீட்டில் 105 நாட்கள் பயணித்த சிவின் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த மொத்த நாட்களுக்கும் சேர்த்து 21 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.