Leo : ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகி 8 நாட்கள் முடிவில் சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படத்தை தொடர்ந்து விஜயின் லியோ படம் இதுபோல மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்த பெரிய திட்டம் திட்டி வருகிறது.
அதாவது லியோ திரைப்படம் பேன் இந்திய திரைப்படமாக வெளியாக இருக்கிறது. ஆனால் நடக்கின்ற சூழ்நிலைகளை எல்லாம் பார்த்தால் விஜயின் லியோ படத்துக்கு தான் ஆபத்து இருக்கிறது லியோ படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது தமிழ்நாட்டில் விஜய்க்கு போட்டியில்லை..
என்றாலும் பிற மாநிலங்களில் ரஜினியின் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் டாப் ஹீரோக்களுடன் அவர் மோத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது தெலுங்கில் ரஜினியின் நெருங்கிய நண்பராக இருக்கும் நடிகர் பாலகிருஷ்ணனா நடிப்பில் உருவாகியுள்ள பகவத் கேசரி என்ற திரைப்படம் லியோ படத்துடன் மோதும்..
இது ஒரு பக்கம் விஜய்க்கு குடைச்சல் கொடுத்தாலும் மறுபக்கம் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடித்துள்ள கோஸ்ட் திரைப்படம் லியோ படத்திற்கு போட்டியாக ரிலீஸ் ஆகியுள்ளது. இதனால் லோகேஷ் மற்றும் விஜய் தலையை பிச்சி கொண்டு இருகின்றனர்.
ரஜினியின் நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேரும் லியோ படத்திற்கு தற்பொழுது கட்டம் கட்டி உள்ளதால் லியோ படத்தின் வசூல் பாதிப்பது உறுதி. மேலும் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முந்துவது கஷ்டம் எனக் கூறி பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடைபெறலாம்..