இரவு பார்ட்டியில் கும்மாளம் அடிக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ஷிவானி நாராயணன்.!! அவரு இல்லாமையா..வைரலாகும் புகைப்படம்..

shivani33
shivani33

விஜய் டிவியில் கடந்த 4 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த மூன்று ஆண்டுகளை விட பிக்பாஸ் சீசன் 4 தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இதில் ஷிவானி மற்றும் பாலாஜி இருவரும் ஒன்றாக இந்நிகழ்ச்சியில் சுற்றி வந்ததால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று ரசிகர்கள் இவர்களுக்கு  தனி ஆர்மியை  உருவாக்கினார்கள்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பல ரசிகர்கள் உங்களை வைத்து பாலாஜி ரன்னராக வெற்றி பெற்றார் ஆனால் நீங்கள் டம்மி ஆகிவிட்டீர்கள் இப்பொழுதாவது உங்கள் அம்மா சொல்வதை கேளுங்கள் என்று அட்வைஸ் செய்து வருகிறார்கள்.

ஆனால் ஒரு புறம்  பாலாஜி ரசிகர்கள் ஏன் நீங்கள் பாலாஜியை அவாய்ட்  செய்றீர்கள். இப்பொழுது தான் பிக்பாஸ் முடிந்துவிட்டதே நீங்கள் மற்ற போட்டியாளர்களுடன் நிற்பதை விட பாலாஜியின் பக்கத்தில் நின்றால் தான் அழகாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் ஷிவானி, ஆஜித், ரம்யா பாண்டியன், சம்யுக்தா மற்றும் பாலாஜி ஆகியோர்களுடன் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அப்புகைப்படத்தில் வெளியிலும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி வெளியாக இருக்கும் நிலையில் அதில் கிளிப்பச்சை கலர் சட்டையில் லுங்கி கட்டிக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

146394174_433928231142115_5810726180515360559_n