பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிவந்த பிறகு மீண்டும் இனையும் பாலாஜி மற்றும் ஷிவாணி!! விஜய் டிவி செய்த அடுத்த வேலை..மகிழ்ச்சியில் ரசிகர்கள்

bala-shivani
bala-shivani

சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் காதலர்களாக பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி நாராயணன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இதன் மூலம் இவர்களுக்கு என்று தனி உருவாகியது.

இந்நிகழ்ச்சியில் ஷிவானி பாலாஜியை  பார்ப்பதை மட்டும் தனது முழு நேர பணியாக வைத்திருந்தார். இதன்மூலம் ரசிகர்களுக்கு பிடித்தவர்களாக இருவரும் மாறினாலும் ஷிவானியின் அம்மா நிகழ்ச்சிக்கு வந்தபோது குடும்ப மானத்தையே வாங்கிட்ட என்று ஷிவானியை கடுமையாக திட்டி தீர்த்தார் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

அதன் பிறகு ஷிவானி பாலாஜியிடம் கொஞ்சம் விலகியே இருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்த பிறகு பலருக்கும் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில் பாலாஜிக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் ஷிவானி மற்றும் பாலாஜி இணைந்து சீரியலில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் சீரியல் ஷிவானிக்கு ஜோடியாக நடித்திருந்த அசிம் தற்பொழுது தான் தன் மனைவியிடமிருந்து சட்டப்படி விவாகரத்து வாங்கினார்.

ஷிவானி அசிம்மை ஒருதலையாக காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் அசிம் மற்றும் ஷிவானி இணைந்து நடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் எந்த செய்தியும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.