சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகி அதன் மூலம் திறமை மற்றும் அழகு இருக்கும் நடிகைகள் பலரும் வெள்ளி திரைப்பட வாய்ப்புகளையும் கைப்பற்றி தற்போது சினிமாவில் சிறப்பாக பயணித்து வருகின்றன. அதில் ஒருவர் தான் ஷிவானி நாராயணன்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற சீரியல்கள் மூலம் அறிமுகமானவர் இருந்தாலும் இவரை பெரியளவு பிரபலப்படுத்தியது சமூக வலைதளங்களில் இவர் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் தான் நாம் சினிமாவில் பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு ரசிகர்களின் துணை வேண்டும் என்பதை..
நன்கு புரிந்து கொண்டு ரசிகர்களை கவரும் வகையில் கிளாமர் போட்டோ சூட்.. புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் எண்ணற்ற பாலோவர்ஸ்களை கொண்டு உள்ளார். அண்மையில் வெளிவந்த வீட்டில விசேஷம், விக்ரம் போன்ற திரைப்படங்களில் சின்ன ரோல்களில் நடித்து அசத்தியுள்ளார் ஷிவானி நாராயணன்.
இதைத்தொடர்ந்து வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் பம்பர் போன்ற ஒரு சில படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அந்த வகையில் இதுவரை ஷிவானி நடிப்பில் வெளிவந்த வீட்டில விசேஷம், விக்ரம் போன்ற படங்களில் சின்ன ரோல்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் பம்பர் படத்தின் மூலம் படத்தில் முழு ஹீரோயினாக நடிக்க உள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்த படத்தில் ஷிவானிக்கு ஹீரோவாக 8 தோட்டாக்கள் படத்தின் நடிகர் வெற்றி நடித்துள்ளார் படத்தின் படப்பிடிப்பு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறதாம். இந்த படத்தில் ஷிவானி அவரது சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளார் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.