விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகர் சோம் சேகர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சோம் சேகர் தனது பிறந்தநாளை பிக்பாஸ் போட்டியாளர்களுடன் மிகவும் கோலாகலமாக கொண்டாடி உள்ளார்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் சோம் சங்கரின் தம்பி ஒரு பக்கம் கேப்ரில்லா இன்னொரு பக்கம் சிவானி இருவரின் மீதும் கை போட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சோம் சங்கரின் தம்பியை கலாய்த்து வருகிறார்கள்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜி, அர்ச்சனா,ரியோ,கேப்ரில்லா,ஷிவானி நாராயணன், சம்யுத்தா, ஆஜித் ஆகியோர் தன் குடும்பத்துடன் சோம் சேகரின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்கள்.
மற்ற போட்டியாளர்களான ஆரி அர்ஜுனன், சுரேஷ், ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி, வேல்முருகன், ரேக்கா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் தமிழ் மகன் திரைப்படத்திற்குப் பிறகு பெரிதாக எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. என்று புலம்பி வந்த இவருக்கு பிக்பாஸ் சீசன் 4 பிறகு இந்த வருடமாவது இவருக்கு பல வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று பலர் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
சோம் சேகர் உங்கள் அன்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய பாக்கியம் என்று கூறி பிறந்த நாளின் பொழுது எடுத்த பல புகைப்படங்களையும், பாலாஜிவுடன் ஆட்டம், பாட்டம் என டிஜே பாடல்களை பாடி கொண்டாடிய வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
.@officialbalaji Shared this cute video & conveyed his Birthday wishes to @somtheapeman🎂
Admins from @Balaji_Trends & #BalajiMurugaDoss Fans wishing #Somshekar A very Happy Birthday🎂#HBDSom #SOM pic.twitter.com/FlmOqITNcn
— 𝔹𝕒𝕝𝕒𝕛𝕚𝕄𝕦𝕣𝕦𝕘𝕒𝔻𝕠𝕤𝕤 𝕋𝕣𝕖𝕟𝕕𝕤™ (@Balaji_Trends) February 28, 2021
இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.