விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ஷிவானி நாராயணன்.
இதனைத் தொடர்ந்து கடைக்குட்டி,சிங்கம் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்து வந்தார்.
பிறகு சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் இவரின் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தனர்.
இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4ரில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடங்கிவிட்டார். அந்த வகையில் மிகவும் குட்டியான டீசர்ட் அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் காதலர் தினத்திற்கு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.