அடுத்தடுத்த பட வாய்ப்புகளை அள்ளும் பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன்.! இப்ப யார் படத்தில் கமிட்டாகி உள்ளார் தெரியுமா.?வைரல் புகைப்படம் இதோ.

shivani narayanan

விஜய் டிவி பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் ஷிவானி நாராயணன். மேலும் இவருக்கு இளம் வயதிலேயே சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது அதனை  ஷிவானி நன்றாக பயன்படுத்திக்கொண்டு  அவரது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

மேலும் இவர் சினிமா உலகில் கால் தடம் பதிக்க அவரது சமூக வலைதள பக்கங்களில்  வித விதமான உடையணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு இளசுகளை தன் பக்கம் இழுத்தார். பின்பு இவருக்கு பிக்பாஸ் சீசன் போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் அவரது திறமையை ஓரளவுக்கு வெளிப்படுத்தி மக்கள் அனைவரிடமும் பிரபலமடைந்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சி முடிந்து இவருக்கு வெள்ளித்திரையில் பல்வேறு பட வாய்ப்புகள் வந்த வண்ணமே உள்ளன. அந்தவகையில் இவர் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் விக்ரம் திரைப்படத்தில் இவர் இணைந்துள்ளார். மேலும் இந்த படத்தில் மற்றொரு டாப் நடிகரான விஜய் சேதுபதிக்கு  ஜோடியாக நடித்து வருகிறாராம்.

இதனையடுத்து தற்போது இவர் மற்றொரு திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின ஷிவானி அவரது இன்ஸ்டா பக்கத்தில் இயக்குனர் பொன்ராம் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் சிவானி காவலர் உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு இயக்குனர் பொன்ராம் உடன் இணைவது மகிழ்ச்சி என   பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் பொன்ராம் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதில் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இதனால் இவருடன் இணைந்து ஷிவானி இந்த படத்தில்தான் நடித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகின.மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

shivani and ponram
shivani and ponram