சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கால் தடம் பதித்துள்ள நடிகைகளில் ஒருவர் ஷிவானி நாராயணன். இவர் டிவி சேனல்களில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டிசிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் ஹீரோயினாக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களிடையே அறிமுகமானவர்.
பின்பு சீரியலுக்கு அடுத்து ஒரு மாபெரும் நிகழ்ச்சியான சின்னத்திரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்துகொண்டு நீண்ட நாட்கள் பயணித்து ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டவர். இதனையடுத்து சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ஷிவானி நாராயணன். அப்படி கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருவார்.
இப்படிப் புகைப்படங்கள் மூலம் பிரபலமடைந்த ஷிவானி தற்போது வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அப்படி உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வரும் மற்றொரு பிரபல நடிகரான விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ், ஆர்ஜே பாலாஜியின் படம் மற்றும் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம் என பல படங்களில் கமிட்டாகி செம பிஸியாக நடித்து வருகிறார் ஷிவானி. இப்படி படங்கள் ஒருபக்கம் இருந்தாலும் தன்னை பிரபலப்படுத்திய ஃபோட்டோஷூட்டை தொடர்ந்து நடத்த முடியவில்லை என்றாலும் அப்பப்போ போட்டோ ஷூட் நடத்தி சில புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.
அப்படி தற்போது ஜீன்ஸ் மற்றும் பனியனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகின்றன. மேலும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் பெற்று வருகின்றனர்.