சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகிய பலரும் வெள்ளித்திரையில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் பகல் நிலவு சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு பெற்று உள்ளவர்தான் நடிகை ஷிவானி நாராயணன்.
பகல் நிலவு சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் மற்றும் இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததால் சீரியல்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இந்நிகழ்ச்சியில் இவர் பாலாஜி பின்னாடியே சுற்றியதால் இவரை பலரும் திட்டி வந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் ஒரு வாரத்தில் தனது சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி சிங்கப் பெண் என்ற பெயர் எடுத்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பேட்டி ஒன்றில் ஹீரோயினாக நடிப்பதற்கு சில திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளதாகவும் விரைவில் அந்த திரைப்படத்தின் சூட்டிங் நடைபெறும் என்றும் கூறியிருந்தார்.
தற்பொழுது லாக் டவுன் என்பதால் வீட்டிலேயே இருந்து வரும் ஷிவானி நாராயணன் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதன் மூலம் அதிகப்படியான பாலோசர்களைக் கொண்டுள்ள இவருக்கு 19 வயதுதான் ஆகிறது.
ஆனால் பார்ப்பதற்கு பெரிய பெண்ணாக தெரிந்தாலும் ஒரு தரப்பு ரசிகர்கள் இந்த வயதில் இது கொஞ்சம் அதிகம்தான் என்று கூறி வருகிறார்கள். இவ்வாறு கவர்ச்சியில் ஆர்வம் காட்டி வந்த இவர் சமீப காலங்களாக புடவை மற்றும் தாவணி பாவாடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது மஞ்சள் நிற உடையில் மஞ்ச காட்டு மைனா போல் இருக்கும் அழகிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.