பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.அந்த வகையில் சில சீரியல்கள் முடிவடைந்து பல வருடங்கள் ஆனாலும் ரசிகர்கள் அந்த சீரியலை மறக்காமல் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் ஒன்றுதான் சரவணன் மீனாட்சி.
சரவணன் மீனாட்சி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வந்ததால் 3 சீசன்கள் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில் மூன்றாவது சீசனின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். இதனைத் தொடர்ந்து பகல் நிலவு சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலம் அடைந்தார்.
அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் கதாநாயகியாக நடிக்க சில திரைப் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இவர் சோஷியல் மீடியாவில் கிளாமர் குயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவருக்கு தற்பொழுது 19 வயது ஆகிறது ஆனால் 30 வயது முன்னணி நடிகைகளின் ரேஞ்சுக்கு புகைப்படங்கள் வெளியிடுவதால் பலர் இவரை திட்டி வருகிறார்கள். இருந்தாலும் ஒரு சிலர் இவரை ஆதரித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்பொழுது தாவணி பாவாடை என்ற பெயரில் இணையதளத்தில் அட்டகாசம் செய்து உள்ளார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும்.