சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியீட்டு அலற விட்டு வருகிறார்கள். அந்த வகையில் திரைப்படங்களில் கூட இல்லாத அளவிற்கு வளர்ச்சியின் உச்சத்தை தொட்டு உள்ளார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீசன் 3 மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதனைத் தொடர்ந்து பகல் நிலவு சீரியல் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த இரட்டை ரோஜா சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 4-யில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
இந்நிகழ்ச்சியில் இவர் பாலாஜி பின்னாடியே சுத்தி வந்ததால் இவரை பலர் திட்டி வந்தார்கள்.அதன்பிறகு இந்நிகழ்ச்சிக்கு ஷிவானியின் அம்மா வரும் பொழுது மிகவும் கடுமையாக கண்டித்ததால் புரிந்து கொண்ட ஷிவானி இருந்த ஒரு வாரத்தில் தனது சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி சிங்கப் பெண் என்ற பெயருடன் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதனை தொடர்ந்து யூடியூப் சேனல் ஒன்றில் சிங்கிள்ஸ் பாடலொன்றில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்நிலையில் தொடர்ந்து ஷிவானி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அழகான கேரள புடவையில் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.