சின்னத்திரை மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ஷிவானி நாராயணன் இவர் எப்படியாவது வெள்ளித்திரையில் நுழைய வேண்டும் என்பதற்காக சமூக வலைதளத்தை பயன்படுத்தி வந்தார். அந்த வகையில் தினமும் கவர்ச்சி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தனது பக்கம் இழுத்து வந்தார்.
இவர் வெளியிடும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்ததோ இல்லையோ விஜய் தொலைக்காட்சியை வெகுவாக கவர்ந்து விட்டது அதனால் இவருக்கு பிக்பாஸ் சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் தற்பொழுது நல்ல நிலைமையில் படவாய்ப்புகள் உடன் இருக்கிறார்கள் அந்த வகையில் ஷிவானி நாராயணன் அவர்களும் பிக்பாஸ் முடிந்த கையோடு படங்களில் கமிட்டாகி வருகிறார்.
ஷிவானி நாராயணன் அவர்களுக்கு சிறந்த அறிமுகத்தைப் பெற்றுக்கொடுத்தது சீரியல் தான் என்றாலும் தற்பொழுது வெள்ளித்திரை பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் சில இயக்குனர் தன்னிடம் கதை கூறினாலும் மனதிற்கு பிடித்த கதையாக நல்ல கருத்துள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.
தனக்கு வரும் பட வாய்ப்புகளை சில நண்பர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்து வருவதாக கூறப்படுகிறது பட வாய்ப்பு வருவதால் கவர்ச்சியை வாரி இறைக்காமல் அளவான கவர்ச்சி ஒரு சில புகைப்படங்களை சமீப காலமாக வெளியிட்டு வருகிறார் அதுமட்டுமில்லாமல் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிக்கும்படி அமைந்து வருகிறது.
இந்த நிலையில் இவருக்கு முதல் திரைப்படமே ஜாக்பாட் என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் இவர் முதல் திரைப்படத்திலேயே விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல நடிகைகள் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வந்தார்கள் அந்த வகையில் ஷிவானி நாராயணன் பட்டுப்புடவை அணிந்து கொண்டு நெற்றியில் குங்குமத்துடன் அடக்கத்துடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த அடக்க ரொம்ப பிடிச்சிருக்கு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.