தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஷிவானி நாராயணன். இவர் முதலில் விஜய் டிவி தொலைக்காட்சியில் வெளியான பகல் நிலவு, கடையில் குட்டி சிங்கம் போன்ற சீரியல் நடித்து பிரபலம் அடைந்தார் அதனைத் தொடர்ந்து ஒன்னு ரெண்டு சீரியல்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் திடீரென அதில் அனைத்திலும் இருந்து வெளிவந்து வெள்ளித்திரைக்கு அடி போட ஆரம்பித்தார்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து க்யூட்டான மற்றும் கிளாமரான உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கொஞ்சம் கொஞ்சமாக பெருக்கிக் கொண்டே வந்தார் ஒரு கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசதினார். வெளியே வந்த அவருக்கு பட வாய்ப்பு எட்டிபார்க்கவில்லை..
தொடர்ந்து போராடிய ஷிவானி நாராயணனுக்கு 2022 ஆம் ஆண்டு நல்ல ஆண்டாக அமைந்தது ஆம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பை ஷிவானி நாராயணன் ஏற்று நடித்தார். படத்தில் இவருடைய நடிப்பு சின்ன கதாபாத்திரம் தான் என்றாலும் பெயர் அப்பொழுது பெரிய அளவில் பேசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வீட்டுல விசேஷம், நாய் சேகர் ரிட்டன்ஸ், டிஎஸ்பி போன்ற படங்களில் நடித்து அசத்தினார். இப்பொழுது கூட BUMPER என்னும் திரைப்படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து வெளிப்படையாக பேசியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது..
சின்னத்திரையில் தனக்கு எளிதாக வாய்ப்பு கிடைத்தாலும் சினிமாவில் அவ்வளவு எளிதாக தன்னை நிரூபிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என கூறினார் மேலும் சினிமாவில் தனக்கு எந்தவிதமான பேக்ரவுண்டும் இல்லாததும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நடிகை ஷிவானி நாராயணன் தெரிவித்துள்ளார். அப்போது பிக் பாஸ் காதலை குறிப்பிடும் வகையில் காதல்தான் சினிமா கேரியரில் பாதிப்பை ஏற்படுகிறதா என கேட்கப்பட.. இதற்கு பதில் அளித்த ஷிவானி நாராயணன் சினிமா மீதான காதலல் தான் என்னுடைய கேரியரை துவக்கி வைத்ததாக ஒரு மாதிரியாக மழுப்பி பதில் தெரிவித்தார்.