பாலாஜி முருகதாஸ் பிறந்தநாள் கொண்டாட விழாவில் கலந்துக்கொண்ட ஷிவானி நாராயணன் – இருவரும் நெருக்கமாக எடுத்த புகைப்படம் இதோ.

shivani-narayanan
shivani-narayanan

இளம் வயதிலேயே சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர் நடிகை ஷிவானி நாராயணன் இவர் இதுவரை சின்னத்திரையில் கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு, இரட்டை ரோஜா போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சீரியல்களில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வந்த ஷிவானி நாராயணன்.

திடீரென அதுக்கு டாட்டா காட்டிவிட்டு  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடியேறினார் அதுவும் இவர் மாடலிங் துறையில் இருந்து வந்த பெண் என்பதால் ஆடை அளவை குறைத்துக் கொண்ட புகைப்படங்களை அள்ளிவிசுவதை மிக சாதாரணமாக செய்து வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இருப்பினும் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். இதனால் இன்ஸ்டா கிராம் பக்கத்தில் இவரை பின்பற்றுவது எண்ணிக்கை தாறுமாறாக எகிறியது.

இந்த சமயத்தில் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது இதில் கலந்துகொண்டு பாலாஜி முருகதாஸுடன் இவர் செய்த லூட்டிகள் கொஞ்ச நஞ்சமல்ல.. அனைத்தும் ரசிக்கும் படியும் இருந்தது. காதல், ரொமான்ஸ், சென்டிமென்ட் என எல்லாவற்றிலும் தனது திறமையை நிரூபித்து மக்கள் மனதில் நல்ல பெயரை எடுத்து வெளியேறினார்.

வெளியே வந்த அவருக்கு படவாய்ப்புகளும் தற்போது கிடைத்துள்ளன லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ள அதனைத் தொடர்ந்து தற்போது செம்ம சந்தோஷ்த்தில்  இருப்பதோடு புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணமே இருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் பாலாஜி முருகதாஸுடன் சுத்தி வந்த ஷிவானி நாராயாணன்.

பாலாஜி முருகதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தனது அம்மாவுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் ஷிவானி நாராயணன். மேலும் பாலாஜி முருகதாஸுடன் நெருக்கமாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது தீயாய் பரவி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

shivani and balaji murugadoss
shivani and balaji murugadoss