என்ஜாய் என்ஜாமி பாடலை ஓரம் கட்டும் அளவிற்கு சிங்கிள் பாடலில் ஷிவானி.! புது முயற்சியில் கலம் இருங்குகிறார் போல.

இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷிவானி நாராயணன்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி, பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் மற்றும் சீ தமிழில் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இதன் மூலம் இவருக்கு சின்னத்திரையில் பிரபலம் அடைந்தாலும் திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.தற்பொழுது கதாநாகியா நடிப்பதற்கு சில படங்களில் கமிட்டாகி உள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது கொரோனா  தாக்கம் அதிகமாக இருப்பதால் படப்பிடிப்புகள் தள்ளிப்போகும் என்ற நிலையில் ஷிவானி நாராயணன் புதிய வேலையில் இறங்கியுள்ளார்.அதாவது தற்போது சிங்கிள்ஸ் பாடல் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலம் அடைந்து விடுகிறது.

அந்தவகையில் அஸ்வின் சமீபத்தில் நடித்திருந்த குட்டி பட்டாச சிங்கிள் பாடல் தாறுமாறாக பிரபலமானது.  இந்த மாதிரி சிங்கிள்ஸ் பாடல் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில் ஷிவானியும் சிங்கிள் பாடல் ஹீரோயினாக பணியாற்றி வருகிறார்.

அந்த வகையில் இந்த பாடல் நான்கு நிமிட காதல் பாடல் ஆகும்.இதில் ஹீரோயினாக ஷிவானி நாராயணன் மற்றும் ஹீரோவாக பூரனேச் நடிக்கிறார். இந்தப் பாடலை பேச்சு கலர் படத்தை இயக்கிய சதிஷ் செல்வ குமார் இயக்குகிறார்.  இவர்களைத் தொடர்ந்து தடம் திரைப்படத்தில் இசை அமைத்திருந்த அருண் ராஜ் இசையமைத்து வருகிறார்.

இந்தப் பாடலுக்கு போதையில் ஆடாதே என்ற பெயர் வைத்துள்ளார்களாம். இந்தப்பாடல் கொஞ்சம் என்ஜாய் என்சாமி பாடலைப் போல இருக்கும் இந்தப் பாடல் 4 நிமிட ஒரு கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்கள்.