குக் வித் கோமாளியில் அஸ்வினிடம் ஷிவாங்கி செய்த சேட்டை!! வைரலாகும் புகைப்படம்

shivangi222
shivangi222

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எப்படி நல்ல வரவேற்பு கிடைக்கிறது அதுபோலவே குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கு பெற்று வரும் சிவாங்கி, பாலா,புகழ் போன்றோருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதன் மூலம் இவர் மூவருக்குமே படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.அந்தவகையில் சிவாங்கிக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் டான் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு.

இந்நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி சூட்டிங் இரண்டு நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது அஸ்வின் தனியாக நின்று பர்பாமென்ஸ் செய்து வருகிறார்.

இதனை சிவாங்கி அஸ்வினுக்கு தெரியாமல் வீடியோ எடுப்பதை திடீரென்று அஸ்வின் பார்த்து விட்டார். சிவாங்கி உடனே சிரிக்கிறார். அந்த புகைப்படத்தை தற்போது அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம்  இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

shivangi21
shivangi21