பிரபல விஜய் டிவியின் மூலம் முகம் தெரியாத பலரும் பிரபலம் அடைவதற்கு பல நிகழ்ச்சிகளை புதிதாக அறிமுகம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் சூப்பர் சிங்கர், டான்ஸ் நிகழ்ச்சி காமெடி ஷோ, ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட பல ஷோக்கள் மூலம் சினிமாவில் பிரபலம் அடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பாடகி சிவாங்கி. ஆரம்பத்தில் இவரின் குரலை பார்த்து குழந்தை போல் இருக்கிறது என்று பலர் கிண்டல் செய்து வந்தார்கள். அதன்பிறகு இவர் பாட ஆரம்பித்ததும் ஒட்டுமொத்த செட்டும் அமைதியாகி விட்டது அந்த அளவிற்கு தனது சிறந்த திறமையை வெளிப்படுத்தி பல திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவரையும் கவர்ந்தார்.
இவ்வாறு பிரபலமடைந்த இவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக பங்குபெற்ற பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். நிகழ்ச்சிக்குப் பிறகு திரைப்பிரபலங்கள் கூட இவரின் ரசிகர்களாக மாறி வருகிறார்கள்.
இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு பட வாய்ப்புகள் மற்றும் பாடல் வாய்ப்புகளும் அதிகமாக கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது இவர் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஒருவரின் திரைப்படத்தில் பாடி உள்ளார். இந்த பாடல் தான் சமீபத்தில் வெளிவந்து உள்ளது.
முன்னணி நடிகரான சாந்தனு மற்றும் அதுல்யா ரவி நடித்திருந்த முருங்கக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் சிவாங்கி மற்றும் இவரின் நெருங்கிய நண்பரான சாம் விஷால் இருவரும் இணைந்து ஒரு பாடல் பாடி உள்ளார்கள் அந்த பாடல் சற்றுமுன் வெளிவந்து வைரலாகி வருகிறது.
இந்தப்பாடல் டாக்கு லெஸ்ஷி வொர்க் மோரில் என்று ஆரம்பித்து அதன் இடையில் சிவாங்கி ஹார்ட் குள்ள சத்தம் இல்லை என்று பாடிய வரிகள் தான் தற்போது வருகிறது ஹிட் பெற்று வருகிறது. அதோடு முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் சாந்தனு, அதுல்ய ரவி இவர்களை தொடர்ந்து பாக்கியராஜ் ,யோகிபாபு, மதுமிதா உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.
இத்திரைப்படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க ஸ்ரீஜார் இயக்கிவுள்ளார்.