டிஆர்பிஎல் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதுப்புது நிகழ்ச்சி மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி சீசன் 4.
இந்த நிகழ்ச்சி இதுவரை 20 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் கோமாளிகள் மற்றும் சிலர் நமக்கு புதியவர்கள் ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது கடந்த வாரம் நிகழ்ச்சியில் விஜே விஷால் வெளியேறினார் இவர் இதற்கு முன்பு பாக்கியலட்சுமி சீரியலில் நடித்தவர் தான்.
இவர் வெளியேறவுடன் ஒரு பதிவு வெளியானது அதாவது சிவாங்கியால் தான் தான் வெளியேற்றப்பட்டேன் என சில பதிவுகள் வெளியானது இது குறித்து சிவாங்கி இந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம் யாரும் சாதாரணமாக இந்த நிகழ்ச்சியில் ஜெயிக்க முடியாது என பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போவதாக சில தகவல் வைரலாகி வருகிறது அதாவது குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியிலிருந்து வெளியேற சிவாங்கியின் அம்மா வற்புறுத்தி வருவதாக தகவல் கிடைத்தது அவர் இசைத் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற ஆசையில் தான் அவரை வெளியேற சொல்கிறார் அவரது அம்மா என தகவல் கிடைத்துள்ளது.
சிவாங்கி அம்மாவின் வற்புறுத்தலையும் மீறி தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி கலந்து கொண்டுள்ளார் ஆனால் இனி வரும் நாட்களில் திடீரென அவருடைய அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக சிவாங்கி தரப்பிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.