பொதுவாக விஜய் டிவியில் அறிமுகமாகும் அனைத்து பிரபலங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் கிடைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியும் தொடர்ந்து ஏராளமான புதிய நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்திய வரும் நிலையில் கடந்த பல வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்து பலரும் சினிமாவில் பாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் தான் சிவாங்கி, பிரியங்கா இவர்கள் இருவரும் சமீபத்தில் திருமண மலர்கள் வருவாயா என்ற பாடலை பாடி அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட அந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கான மக்கள் பகிர்ந்து இருக்கிறார்கள். அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பாட்டு பாடி பிரபலமடைந்தவர் தான் பிரியங்கா பிறகு சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் இவருடைய மெல்லிய குரல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது குறிப்பாக சின்ன சின்ன வண்ணக்குயில் பாட்டு மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இவ்வாறு பிரபலம் அடைந்த இவர் யூடியூப் சேனல் ஆரம்பித்து பாடல் பாடி வீடியோ வெளியிடுவதை தொடங்கினார்.
இவ்வாறு பிரபலம் அடைந்துள்ள பிரியங்கா பல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் பல திரைப்படங்களில் பாட்டு பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும் வெளிநாட்டு கச்சேரிகளிலும் பாட்டு பாடி மிகவும் பிசியாக இருந்து வருகிறார் பிரியங்கா. பிரியங்கா உடன் இணைந்து சிவாங்கியும் பல நாடுகளுக்கு சென்று கச்சேரியில் கலந்து கொள்கிறார் எனவே அந்த வீடியோக்களை சிவாங்கி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான சிவாங்கி பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் இந்நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் இந்நிலையில் பிரியங்கா, சிவாங்கி இருவரும் இணைந்து திருமணம் மலர்கள் வருவாயா என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார்கள் அது குறித்த வீடியோ வெளியாகி சில மணி நிமிடங்களிலேயே பல்லாயிரம் கணக்கான மக்களை கவர்ந்துள்ளது.