அஜித் விஜய் பட ரேஞ்சுக்கு விலைபோன சிவகார்த்திகேயனின் டாக்டர்.! கோடி கோடியா கொட்டுறாங்களே

sivakarthi-keyan-doctor-movie
sivakarthi-keyan-doctor-movie

விஜய் டிவியின் மூலம் காமெடி போட்டியாளராக பங்குப்பெற்று பிறகு நீண்ட காலம் தொகுப்பாளராக பணியாற்றி  இதன் மூலம் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்ததும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

தற்பொழுது உள்ள ரஜினி, கமல்,அஜீத் மற்றும் விஜய்க்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நான் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார். இவர் தற்பொழுது நடிகராக மட்டுமல்லாமல் பாடல் எழுதுவதிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தளபதி 65 படத்தில் இவர்தான் ஒரு பாடல் எழுத உள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளிவந்தது.  இந்நிலையில் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சில குளறுபடி காரணத்தால் மே மாதம் ரம்ஜான் விடுமுறையில் வெளியாகும் என்று கூறியிருந்தார்கள். இந்நிலையில் தற்பொழுது கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் தியேட்டரில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் எனவே ஓடிடி வழியாக  வெளியாகும் என்று கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் நடிகர் கார்த்திக்,அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியான அமேசான் தளத்தில் சிவகார்த்திகேயன் திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் டாக்டர் திரைப்படம்  42 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.