நான் மூனாம் க்ளாஸ் நீ எட்டாம் க்ளாஸ்..! நீ என்னைவிட படிச்சவன்டா அதனாலதான் உன்கிட்ட மரியாதையா இருக்கான் என்ற சிவாஜி..!

kamal-sivaji-1
kamal-sivaji-1

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் நடிகர் சிவாஜி கணேசனும் ஒருவர் அந்த வகையில் இவர் அந்த காலத்திலே பல மெகா ஹிட் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் ஏகப்பட்ட விருதுகளை வாங்கி பெயரையும் புகழையும் சம்பாதித்தவர்.

ஒரு பிரபலமான நமது நடிகர் நடிகர் பிரபுவின் தந்தை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் நடிகர் சிவாஜி கணேசனை பற்றி உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஒரு உருக்கமான விஷயத்தை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கூரியுள்ளார்.

அப்போது நடிகர் கமல்ஹாசனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கு கமலஹாசனும் அசால்டாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார் அப்போது கமலஹாசனுக்கு எத்தனை மொழிகள் தெரியும் என கேள்வி எழுப்பிய நிலையில் கமல் எனக்கு நான்கு மொழிகள் தெரியும் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து எனக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் தான் இதில் எழுதப்படிக்கத் தெரியும் எனவும் கூறியிருந்தார் மேலும் சிவாஜி கணேசன் பற்றி அந்த மேடையில் நடிகர் கமல் சில வார்த்தைகளை கூறி உள்ளார் அப்போது அவர் கூறியது என்னவென்றால் நடிகர் சிவாஜிகணேசன் என்னை அதிகம் படித்தவர் என்று கூறுவார்.

ஏனெனில் சிவாஜி கணேசன் மூன்றாம் கிளாஸ் படித்தவர் ஆனால் கமலஹாசன் எட்டாம் கிளாஸ் படித்தவர் ஆகையால் உன்னை நான் மரியாதையாக தான் பேச வேண்டும் என சிவாஜி கமலிடம் கூறியதாக கமல் கூறியுள்ளார் தற்போது இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக சிவாஜி கணேசன் அவர்கள் பொது நிகழ்ச்சியில் கமலைப் பற்றி பேசினால் அவர் எப்பொழுதுமே கமல் ஐயா என்றுதான் குறிப்பிடுவார் அது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆகையால் இவை கண்டிப்பாக உண்மையாகத்தான் இருக்கும் என பலரும் கூறுவது மட்டுமில்லாமல் சிவாஜியின் இந்த பெருந்தன்மை பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!