விஜயின் திறமையை பார்த்து சிவாஜி கணேசன் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா.? கொண்டாடும் தளபதி ரசிகர்கள்.!

vijay-
vijay-

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்பொழுது தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். வாரிசு திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்துகுமார், ஷாம் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் படகுழு புதிய கட்டுப்பாடுகளை போட்டு படத்தை எடுத்து வருகிறது வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என பட குழு திட்டவட்டமாக கூறி உள்ளது வாரிசு படத்தில் இருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ஆகியவை வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது இது இப்படி இருக்க அடுத்ததாக நடிகர் விஜய் தனது 67வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

அந்த படத்தை லோகேஷ் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி விஜய் அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நடிப்பதால் அவரது மார்க்கெட்டு இன்னும் உச்சத்தை தொடும் என சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் ஒரு மிகப்பெரிய ஸ்டார் ஆனால் அவரை விட மிகப்பெரிய நடிகர்களுடன் நடித்து அசத்தி உள்ளார்.

அந்த வகையில் விஜய் விஜயகாந்த், சிவாஜி கணேசன் போன்றவர்களுடன் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் இணைந்து விஜய் நடித்திருப்பார். சினிமா பயணத்தை தொடங்கும் பொழுதே விஜய் எப்படி வருவார் என்பதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கணித்து உள்ளார் அது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

vijay-and-sivaji-
vijay-and-sivaji-

இந்த தம்பி விஜய் பின்னாடி சினிமாவுல பெரிய ரவுண்டு வருவார் என சிவாஜி கணித்து கூறி உள்ளார் அவர் சொன்னது போலவே தற்பொழுது நடந்து வருகிறது. மேலும் சிவாஜி அவர்களின் நினைவு நாளில் விஜயின் அப்பா எஸ் ஜே சந்திரசேகர் புகைப்படத்தை வெளியிட்டு அதில் சில பதிவுகளை போட்டுள்ளார் இதோ நீங்களே பாருங்கள்.