சிவாஜி என்னை அப்படி அழைத்தார்.. அதுபோல விஜய்யை அழைத்தேன் – விளக்கம் கொடுக்கும் உலகநாயகன்.!

kamal-and-vijay
kamal-and-vijay

நடிப்பு என்றால் நம் நினைவிற்கு முதலில் வரும் நபர் உலகநாயகன் கமலஹாசன் நான்கு வருடங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் சொன்ன ஆக்சன் கதையை கமலுக்கு ரொம்ப பிடித்துப்போகவே அது உடனடியாக படமாக எடுக்கப்பட்டது ஒருவழியாக ஜூன் 3ஆம் தேதி உலக அளவில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதுவரை மட்டுமே கமலின் விக்ரம் திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது படத்தின் வெற்றியை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் இயக்குனர், உதவி இயக்குனர், நடிகர் எனப் பலருக்கும் பரிசு கொடுத்து அசத்தியுள்ளார்

இயக்குனர் லோகேஷ்க்கு  80 லட்சம் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றைப் பரிசளித்தார் உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக் பரிசளித்தார். விக்ரம் படத்தில் கடைசி ஐந்து நிமிடம் வந்து மிரட்டி விட்டு போன சூரியாவுக்கு கதாபாத்திரத்திற்கு பொருந்தியவரே ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார்.

இதன் மதிப்பு மட்டுமே 23 லட்சத்திற்கும் மேல் என கூறப்படுகிறது. தொடர்ந்து விக்ரம் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரஸ்மீட் மீடியாவில் கலந்துகொண்ட கமல் அப்பொழுது விஜய்யை ஐயா என அழைத்து அதற்கான காரணத்தையும் போட்டு உடைத்துள்ளார்.

அதில் அவர் சொன்னது சிவாஜி சார் எப்படி என்னை கமல் அய்யா என்று அழைத்தாரோ அதேபோல் தான் தற்போது விஜய்யை தளபதி ஐயா என அழைத்தேன் நேரம் வந்தால் நான் கண்டிப்பாக விஜயின் திரைப் படத்தை வெளியிடுவேன் என பேசி உள்ளார்.