தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஷெரின்.இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து அவர் தமிழில் விசில், உற்சாகம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதனைத் அடுத்து அவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் சினிமா உலகை விட்டே காணமால் போனார். இதை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரீ-என்ட்ரி கொடுத்தார்.
பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களை சக மனிதர்களாக பாவித்தார்,அன்பை பரிமாறினார் அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு சர்ச்சையான விஷயங்களும் சிக்காமல் நேர்மையாக நடந்த வராகவும் கருதப்பட்டார். எனினும் அவர் பிக் பாஸ் டைட்டில் வெல்லாது சற்று வருத்தமாக இருந்திருந்தாலும் அதற்கு பதிலாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துச் சென்றார்.
பிக்பாஸில் இருந்து வெளிவந்த ஷெரின் அவர்கள் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி வருகிறார் அத்தைகைய புகைப்படங்களை அவ்வப்பொழுது தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் அந்த போல தற்போது புடவையில் இருக்கும் வெளியீட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.
அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷெரின் இப்படி கிராமத்துப் பெண் போல அழகாக இருக்கிறார் என கூறிவருகின்றனர்.