சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்தாலும் அந்த திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறாததால் தற்போதும் சினிமா உலகில் போராடிக் கொண்டிருப்பவர் நடிகர் விக்ராந்த். சினிமாவில் அவரைப் போலவே அவரது அம்மாவும் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சின்னத்திரையில் பண்டியன் ஸ்டோர் என்ற தொடரில் மூர்த்திக்கு அம்மாவாக நடித்து அசத்தி இருந்தார். இந்த சீரியலில் இவர் இறந்தது போனது போல் நடித்த காட்சிகள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்து அசத்தி இருந்தார்.
மக்கள் மற்றும் ரசிகர்களையும் தனது நடிப்பு திறமையின் மூலம் கவர்ந்து இழுத்தார் ஒருவழியாக இந்த சீரியலில் இருந்து அவரது கதாபாத்திரம் முடிவடைந்ததையடுத்து அவர் வெளியேறினார். தற்போது அவர் வெளியேறியதை தொடர்ந்து பல்வேறு பேட்டிகளில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் குறித்து பல விதமாக அவரது கருத்துக்களை சொல்லினார்.
அதைத் தொடர்ந்து இவருக்கு வேறு வாய்ப்புகள் கிடைக்குமா கிடைக்காதா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் சகோதரர் சந்திரஹாசன் அவர்களுடன் ஜோடி சேர்ந்து அப்பத்தாவ ஆட்டையைப் போட்டுட்டாங்க என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ட்ரெய்லர் வருகின்ற அக்டோபர் 8ஆம் தேதி வெளியாக இருக்கிறதாம் அதனையே தற்பொழுது பெரிதும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் எடுத்த உடனேயே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் மேலும் பல வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென ரசிகர்களும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர்.