விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அந்தவகையில் மக்கள் பலரின் ஃபேவரட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பெண் சமாளித்து வரும் குடும்பப் பிரச்சினைகள் போன்றவற்றை மையமாக வைத்து எடுத்து வருகின்றன.
இதனால் தற்போது பாக்கியலட்சுமி தொடரில் பாக்யாவின் மாமனார் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வரும் நிலையில் அவரின் மருத்துவ செலவிற்காக பாக்கியா மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். மேலும் பாக்யாவின் கணவர் கோபி அவரது முன்னாள் காதலியான ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக பாக்கியாவிடம் விவாகரத்து பத்திரத்தில் ஏமாற்றி கையெழுத்து வாங்கி விட்டார்.
இப்படி பல ட்விஸ்ட்டுகளுடன் இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் பாக்யாவின் மூத்த மருமகளான ஜெனிபர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். இந்த சீரியலில் இவரின் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பல ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபராகவும் கூறப்படுகிறது. மேலும் அவரது ரசிகர்களுக்காக விதவிதமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமீபத்தில் நடிகை திவ்யா கணேஷ் சமூக வலைதள பக்கங்களில் அவரது ரசிகர்களுடன் கேள்விக்கு பதில் அளித்து வந்த போது ஒரு ரசிகர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டுள்ளார்.
அதற்கு திவ்யாவும் பதிலளித்துள்ளார். திவ்யா எனக்கு விரைவில் திருமணம் என கூறியுள்ளார். இந்த நிலையில் திவ்யா கல்யாண செய்தியை அறிவித்ததும் மாப்பிள்ளை யாராக இருப்பார் என ரசிகர்கள் பலரும் குழம்பி வருகின்றனர்.