90 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் ராமராஜன் இவர் இதுவரை கரகாட்டக்காரன், வில்லுப் பாட்டுக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், கோபுர தீபம், கிராமத்து மின்னல், எங்க ஊரு காவல்காரன் என தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கன ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்..
மேலும் இவர் நடித்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் இவரது சம்பளமும் அப்போது அதிகமானது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் முதலில் ஒரு கோடியை சம்பளமாக வாங்கிய ஹீரோவாக ராமராஜன் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் நடித்து வந்த காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு நிகராக இவரது படங்கள் பேசப்பட்டன..
இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கின்ற இடம் தெரியாமல் போனார் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்பொழுது சாமானியன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ராமராஜன் சில கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அவரிடம் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என கேட்டுள்ளனர் அதற்கு பழைய காலத்தில் சரோஜாதேவி, சாவித்திரி, கே ஆர் விஜயா அவர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்பொழுதைய காலகட்டத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகை வேறு யாரும் அல்ல.. நடிகை கீர்த்தி சுரேஷ் தான் என குறிப்பிட்டார்.
நடிகையர் திலகம் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டேன் அந்த அளவிற்கு சூப்பராக இருந்தது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது என கூறிய கீர்த்தி சுரேஷ் பற்றி புகழ்ந்து பேசி உள்ளார் இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.