இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்தார் அவருடன் கைகோர்த்து நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இரண்டு டாப் நடிகைகள் ஹீரோயினாக நடித்திருந்தனர். இந்த படத்தில் கதாநாயகன் ராம்போ கண்மணி கதீஜா என்ற இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் காதலித்து வந்தார்.
கடைசிவரை ராம்போ வாழ்ந்தால் இருவருடன் தான் வாழ்வேன் என்ற பிடிவாதத்தில் இருந்தார். ஆனால் இது நடைமுறைக்கு ஒத்து வராது என இரண்டு பெண்களுமே கடைசியில் ராம்போவை கைவிட்டுட்டு சென்றுள்ளனர். இதற்கிடையில் நடக்கும் காமெடி கலாட்டா போன்றவை சிறப்பாக அமைந்துள்ளது மற்றும் இந்த படத்தில் அனிருத்தின் இசை ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
இந்தாண்டில் திரையரங்கில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்று இருந்தாலும் எதிர்பார்த்த அளவு வசூலை ஈட்டி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் சமந்தாவின் ரோலில் முதலில் நடிக்க இருந்தது திரிஷா தானம். ஆம் இயக்குனர் விக்னேஷ் சிவன் முதலில் கதீஜா கதாபாத்திரத்திற்கு த்ரிஷாவை தான் யோசித்து வைத்தாராம்.
ஆனால் திரிஷா இந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்கு காரணம் நயன்தாரா தான் என்ற பேச்சுகளும் அடிபட்டது. இந்த நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் திரிஷா இது குறித்து பேசுகையில் “அந்த படத்தில் நான் நடிக்க வில்லை என்று சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கும். அது அத்துடன் முடிந்து விட்டது. ஒரு விஷயத்தை வேண்டாம் என்று சொல்வதே தெளிவான ஒரு விஷயம் தானே “. நயன்தாராவிற்கும் எனக்கும் இருப்பது ஒரு ஆரோக்கியமான போட்டி.
ஒருவரை ஆதரிப்பதற்காக மற்றொருவரை அசிங்கப்படுத்துவது தான் கேவலம் மேலும் பேசிய திரிஷா நயன்தாரா உட்பட சினிமாவில் இருக்கும் எந்த நடிகைகளுடனும் எனக்கு பெரிதாக நட்பு இல்லை. ஒருவரிடத்தில் நட்பு இருந்தால் தானே பிரச்சனை ஏற்படும் அதற்கு பேசாமல் இருந்தால் வருத்தப்பட தேவையில்லை என தெள்ளத்தெளிவாக கூறியுள்ளார் த்ரிஷா.