தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் நடிகைகள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்கள் அந்த வகையில் இவர்கள் அனைவருமே நல்ல ஜோடி என்றால் அது கிடையாது அந்தவகையில் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டிய ஜோடி என்றால் அது கமல் ஸ்ரீதேவி, ரஜினி ஸ்ரீபிரியா இவர்களை தொடர்ந்து விஜய் சிம்ரன் சொல்லலாம்.
ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் சிம்ரன் ஆகிய இவரும் இணைந்து நடித்துள்ளார்கள் இந்த திரைப்படத்தில் தான் முதன்முதலாக விஜயுடன் சிம்ரன் ஜோடி போட்டு நடித்த திரைப்படம். இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் சரோஜாதேவி ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.
நேருக்கு நேர் மணி ரத்னம் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் ஆனது வசந்த் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் மட்டுமின்றி சூர்யாவும் நடித்துள்ளார். இவர்களுக்கு ஜோடியாக சிம்ரன் கௌசல்யா மற்றும் துணை கதாபாத்திரத்தில் ரகுவரனும் நடித்துள்ளார்.
துள்ளாத மனமும் துள்ளும் இத்திரைப்படமானது விஜய் வாழ்வில் ஒரு மறக்க முடியாத திரைப்படமாக அமைந்தது. அந்தவகையில் இத்திரைப்படத்தில் மணிவண்ணன், தாமு, வையாபுரி நடித்தது மட்டுமல்லாமல் கதாநாயகர்களாக விஜய் மற்றும் சிம்ரன் நடித்த இருப்பார்கள். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே மாபெரும் ஹிட் கொடுத்துள்ளது.
பிரியமானவளே திரைப்படத்தை செல்வபாரதி அவர்கள் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு தந்தையாக பாலசுப்ரமணியம் நடித்தததுமட்டுமில்லாமல் அக்ரிமெண்ட் திருமணத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
உதயா இத்திரைப்படமானது அழகம்பெருமாள் இயக்கத்தில் வெளியானது மட்டுமில்லாமல் இத்திரைப்படத்திலும் விஜய்யும் சிம்ரனும் இணைந்து நடித்துள்ளார்கள் இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசை அமைத்துள்ளார். இதுதான் சிம்ரன் மற்றும் விஜய் இணைந்து நடித்த கடைசி திரைப்படம் ஆகும்.