30 வருட சினிமா வாழ்க்கையில் கமலுடன் ஜோடி சேராத ஒரே ஒரு நடிகை இவர்தான்.! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

kamal-roja
kamal-roja

தென்னிந்த சினிமாவில் முன்னணி நடிகராக வரும் நடிகர் கமலஹாசன் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.மேலும் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வெற்றி பெற்று வருகிறது.

சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ஏராளமான நடிகைகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலகட்டத்தில் வளம் வந்து ரசிகர்களின் கனவு கனியாக இருந்து வந்த ஒரு நடிகை மட்டும் தற்பொழுது வரையிலும் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்ததில்லை என்ற தகவல் சமீபத்தில் வெளிவந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் ,பாடகர் ,பாடலாசிரியர் பல திறமைகளை உடையவராக விளங்குகிறார். மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக சினிமாவை தாண்டி அரசியலிலும் தனது முழு ஈடுபாட்டையும் வெளிப்படுத்தி வருகிறார். காரணமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் சமீபத்தில் யோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

என்னுடைய தயாரிப்பிலேயே வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பான் இந்திய திரைப்படமாக இத்திரைப்படம் விளங்குகிறது. இந்த திரைப்படத்தின் தொடர்ந்த அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்காக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஏராளமான இளம் நடிகைகள் கூட அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என விரும்பி வருகிறார்கள். கமலஹாசன் இளம் வயதில் நடித்திருந்த திரைப்படங்களில் ஏராளமான நடிகைகள் அவருக்கு ஜோடியாக நடிப்பதற்காக போட்டி போட்டு வந்தனர். கடந்த 30 வருட சினிமா வாழ்க்கையில் இதுவரையிலும் கமலஹாசன் உடன் நடித்திராத ஒரே ஒரு முன்னணி நடிகை தான் ரோஜா.

roja
roja

இவர் செம்பருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் அதன் பிறகு சூரியன், உழைப்பாளி, அதிரடிபடை, வீரா, அசுரன் பல படங்களில் முன்னாடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார் .மேலும் இவரின் சிறந்த நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்தார் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாள மாகி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் பிரபலம் அடைந்த இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்கே செல்வமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் மேலும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிறகு இவருக்கு அரசியலின் மீது அதிக ஆர்வம் அதலால் அரசியலில் ஈடுபட தொடங்கினார்.