தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது உள்ள இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவருக்கும் ரோல் மாடலா திகழ்கிறார்.
தற்போது உள்ள நடிகர்கள் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக நயன்தாரா தான் வாங்கி வருகிறார் என்று கூறப்படுகிறது. தற்பொழுது தளபதி விஜய் தனது சம்பளத்தை 50 கோடியிலிருந்து 80 கோடியாக உயர்த்த உள்ளாராம்.
அதேபோல் நடிகர் ரஜினி 104 கோடி லிருந்து 108 கோடியாக உயர்த்தி உள்ளாராம். தல அஜித்தின் 50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. இந்த செயல் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.
நடிகர்களை தொடர்ந்து நடிகைகளில் நயன்தாரா 5 கோடியும்,கீர்த்தி சுரேஷ் 1 கோடியும், சமந்தா 1.5 கோடியும் சம்பளம் வாங்கி வருகிறார்கள்.
இவ்வாறு நயன்தாரா தான் நடிகர்கள் அளவிற்கு முதன்முதலில் சினிமாவில் சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மூத்த முன்னணி நடிகையான கே பி சுந்தராம்பாள் அவர் நடித்த பொழுதே ஒரு லட்சம் சம்பளம் வாங்கி உள்ளார்.
கே பி சுந்தராம்பாள் நடிப்பில் வெளிவந்த அவ்வையார் திரைப்படத்திற்காக தயாரிப்பாளர் எஸ் எஸ் வாசன் ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தை அப்பொழுதே வாங்கி உள்ளார்.இந்த செய்தியை பயில்வான் ரங்கநாதன் தற்போது கூறியுள்ளார்.