தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகர், நடிகைகளின் பழைய புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது அந்த வகையில் தற்பொழுது ஒரு புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு ரசிகர்கள் மத்தியில் உலாவி வருகிறது.
அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் பற்றி தான் தற்பொழுது பார்க்க இருக்கிறோம்.. அந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாரும் அல்ல தென்னிந்திய சினிமா உலகையே தன் கண்ட்ரோலில் வைத்து கொண்டு ஓடும் நடிகை சமந்தா தான் அது.. நடிகை சமந்தா முதலில் மாடலிங் துரையில் பிரபலமடைந்து பின் விளம்பர படங்களில் தலைகாட்டி வந்தார்.
ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அந்த வகையில் முதலில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு நடிகை சமந்தா விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி என தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வெற்றியை குவிக்க தொடங்கினார் மேலும் சோலோ படங்களிலும் நடித்தார்.
இதனால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போனது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இப்படி வெற்றியை மட்டும் கண்டு ஓடிக்கொண்டிருந்த இவர் இப்பொழுது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நடிகை சமந்தாவின் குழந்தை மற்றும் கல்லூரி படிக்கும் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அதில் ஒன்றாக தனது தோழிகளுடன் சமந்தா எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.