அஜித்துடன் ஜோடியாக நடித்த மஞ்சு வாரியரின் மகளா இது.! பா அடுத்த ஹீரோயின் ரெடிபோல…

manju-warrier

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை மஞ்சு வாரியார். இவர் மலையாளத்தை தொடார்ந்து தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பல விருதுகளை பெற்ற அசுரன் திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார்.

இவர் அறிமுகமான முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் இவருக்கு கைக்கூடி வந்தது.  தமிழில் ஒரே ஒரு படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றியை கொண்டு தற்போது அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியார் அஜித்திற்கு சமமாக நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியரின் மகள் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. கடந்த 1998 ஆம் ஆண்டு மலையாள திரைப்பட நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மீனாட்சி என்ற ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியரின் மகள் மீனாட்சியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அச்சு அசல் மஞ்சு வாரியர் போல இருக்காங்களே என்று கூறி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் அடுத்த ஹீரோயின் ரெடி எனவும் கூறி வருகிறார்கள். இந்த புகைபடம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ நடிகை மஞ்சு வாரியின் மகள் மீனாட்சியின் புகைப்படம்.

manju warrier
manju warrier
manju warrier