She is the daughter of actress Sukhanya who has never seen many: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இவர் “புது நெல்லு புது நாத்து” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதை தொடர்ந்து சின்ன கவுண்டர்,வால்டர்வெற்றிவேல், சின்ன மாப்பிள்ளை, உடன்பிறப்பு, திருமதி பழனிசாமி, இளவரசன், இந்தியன், கேப்டன், மொட்ட சிவா கேட்ட சிவா, இனையதளம் போன்ற பல படங்களின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்.
இவர் 90களில் வலம் வந்த அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர் என்பதை அனைவரும் அறிந்ததே. பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்ரீதரன் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்வு ஒரு வருடத்திலேயே முடிவடைந்தது.
இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.விவாகரத்து பெற்ற பின் தொடர்ந்து சின்னத்திரை, வெள்ளித்திரையில் நடித்து வந்தார்.
இவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரை திரை உலகின் வாசம் தெரியாமல் வளர்த்து வருகிறார். இன்று வரை சினிமா துறையில் அவரை அறிமுகப்படுத்தியதே இல்லை. தற்போது அவரது மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.