ராஜா ராணி 2 சீரியலில் இதற்கு மேல் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடிக்க போகும் நடிகை இவர் தான்.! வெளிவந்த ப்ரோமோ..

raja-rani-2-serial

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2.இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.மேலும் எந்த அளவிற்கு சீரியல் கதாநாயகிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த அர்ச்சனா திடீரென்று விலகியது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகியாக ஆலியா மானசாவும் அவருக்கு ஜோடியாக கதாநாயகன் சித்துவும் நடித்த வந்தார். பிறகு ஆலியா மானசா கர்ப்பமாக இருந்த காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து விலகினார் தற்பொழுது சந்தியா கதாபாத்திரத்தில் ரியா என்பவர் நடித்து வருகிறார்.

இவருடைய நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் கதாநாயகியை ஓவர் டெக் செய்யும் அளவிற்கு அர்ச்சனா தன்னுடைய சிறந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்தி வந்தார். பலரால் இவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது இதன் காரணமாக இதற்காக விருதுகளையும் பெற்றார்.

archchana
archchana

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் விலகிவுள்ளார் தற்பொழுது இவர் இந்த சீரியலில் கர்ப்பமாக இருப்பது போல் நடித்து வருகிறார். அந்த வகையில் நேற்று வரையிலும் இவர் நடித்த எபிசோடுகள் வெளியான நிலையில் தற்போது அவருடைய கேரக்டரின் நடித்துள்ள புதிய நடிகையின் ப்ரோமோவை தற்பொழுது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.அந்த ப்ரோமாவில் புது அர்ச்சனாவிடம் கதாநாயகி சந்தியா ஆதியை பற்றி கேட்கிறார் அதற்கு அர்ச்சனாவும் ஆதியும் ஜெசியம் காதலித்ததை கூறுகிறார்.

archchana 1

பிறகு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஆதியை நம்பி வரும் நிலையில் அவன் எப்படிப்பட்டவன் என எனக்கு தானே தெரியும் என மனதில் நினைக்கிறார் அந்த ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகி உள்ளது இவ்வாறு அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்துவரும் இந்த நடிகை இதற்கு முன்பு ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.