3-வதாக திருமணம் செய்யும் வனிதா.? மாப்பிள்ளை இவர் தான்.! வைரலாகும் புகைப்படம்.

vanitha
vanitha

தமிழ் திரையுலகில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து விட்டு காணாமல் போன நடிகைகளில் ஒருவர் வனிதா விஜயகுமார். இவர் விஜய் நடிப்பில் தமிழில் வெளிவந்த சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன்,  சும்மா நச்சுனு இருக்கு, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். என்றாலம் சொல்லக்கூடிய அளவிற்கு வெற்றியை தரவில்லை எனவே சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். இவருக்கு திரைப்படங்கள் நடித்ததன் மூலம் பிரபலம் அடையவில்லை என்றாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நல்ல பிரபலத்தை தந்தது. இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார்.

இந்த நிலையில் இவரைப் பற்றிய சில செய்திகள் வெளிவந்துள்ளது அதாவது 2000 ஆண்டில் நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டாராம் ஆனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதால் விவாகரத்து செய்து கொண்டார்களாம். அதன்பிறகு 2007ஆம் ஆண்டில் ஆந்திராவை சேர்ந்த ஆனந்தராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டாராம் அவரையும் பிடிக்காமல் விவாகரத்து ஆகிவிட்டது. இதனைத் தொடர்ந்து நடன இயக்குனர் ராபர்ட் உடன் லிவிங் டு கெதர் இல் வாழ்ந்து வருகிறார் என கிசுகிசுக்கப்பட்டது.

இந்த நிலையில் இவருக்கு முதல் கணவர் மூலம் ஒரு மகனும் ஒரு மகளும் இரண்டாவது கணவரின் மூலம் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் இருந்து வருகின்றன தற்போது இவர் 3வது திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியது இது வந்தி என்று சிலர் கூறிவந்தனர் ஆனால் அது உண்மைதான் தற்பொழுது வனிதா திருமணம் செய்யப்போகுபவர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்ராம் அவருடைய பெயர் பீட்டர் பால். தற்பொழுது ஊரடங்கு உத்தரவின் காரணமாக யாரிடமும் செல்லாமல் பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் 27ஆம் தேதி வனிதாவின் இல்லத்தில் திருமணம் ஆக உள்ளதாம்.