சினிமாவில் போட்டிகள் இருப்பது போல் சின்னத்திரைகளிளும் கடும் போட்டி நிலவி வருகிறது அந்த வகையில் டிஆர்பி யில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதுப்புது சீரியல்கள் புதுப்புது ரியாலிட்டி ஷோக்கள் என ஒளிபரப்பி தங்களுடைய டிஆர்பியை ஏற்றிக்கொள்ள நினைக்கிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் புது புது நிகழ்ச்சி மற்றும் புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பு வருகிறார்கள்.
அதிலும் படத்தின் டைட்டிலை வைத்து புதிய சீரியல்களை ஒளிபரப்பி மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து டிஆர்பி யில் முதலிடம் பிடிக்க நினைக்கிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைகாட்சியில் தற்பொழுது டிஆர்பிஎல் அதிக ரேட்டிங் பெற்று முதலிடத்தில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியலுக்கு எப்படி ரசிகர் பட்டாளம் இருக்கிறார்களோ அதே போல் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அவருக்கு பதில் இவர் என குறிப்பிட்டு நடிகர் மற்றும் நடிகைகளை மாற்றுவது தொடர்கதையாக வைத்து வருகிறார்கள். இதனால் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த சீரியலை ட்ரோல் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி திடீரென விலகி விட்டார் என தகவல் கிடைத்துள்ளது கதை மற்றும் அடுத்த வார இருக்கும் காட்சிகளில் நடிப்பதற்கு பெரிதாக விருப்பமில்லை என்னுடைய கேரியருக்கு செட் ஆகாது என்பதால் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டேன் என சாய் காயத்ரி கூறியுள்ளார். திடீரென அவர் விலகியது ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
அதேபோல் அடுத்த ஐஸ்வர்யாவாக நடிக்கப்போவது யார் என தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறார்கள் இந்த நிலையில் புது ஐஸ்வர்யாவாக முன்பு நடித்த விஜே தீபிகாவை மீண்டும் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்கள். தீபிகா தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தின் வழியாக வைரல் ஆகி வருகிறது.
இதைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் தீபிகாவா அதற்கு பருத்தி முட்டை அந்த குடவுன்லையே இருந்திருக்கலாம் என கலாய்த்து வருகிறார்கள்.