சினிமா உலகில் பெண் இயக்குனர்கள் மிக குறைவு அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் ரொம்பவும் குறைவு ஆனால் அந்த இயக்குனர்கள் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றும் பெரிய அளவில் பேசப்படுகின்றன. அந்த வகையில் இயக்குனர் சுதா கொங்கரா இறுதிச்சுற்று என்ற படத்தை இயக்கி அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறியது இறுதிசுற்று படம்.
முழுக்க முழுக்க காதல், சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்தும் கலந்த படமாக இருந்தது இந்த படத்தில் ரித்திகா சிங் மாதவன் ஆகியோர் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது படமும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் முதல் முறையாக கைகோர்த்து சூரரை போற்று என்னும் படத்தையும் எடுத்தார்.
அந்த படம் தற்பொழுது தேசிய விருது வாங்கி புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பாக அந்த படம் மட்டுமே 5 விருதுகளை தட்டி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. சூரரை போற்று படத்தை தொடர்ந்து சுதா கொங்கராவும், நடிகர் சூர்யாவும் மீண்டும் ஒருமுறை கைகோர்க்கை இருக்கின்றனர் என்ற தகவல் வெளிவந்த வண்ணமே இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகரிடமும் கதையை கூறி உள்ளார்.
இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் சுதா கொங்கரா சினிமா குறித்தும், தனது படங்கள் குறித்தும் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்பொழுது எனக்கு ஃபேவரட்டான ஹீரோயின் பிரியாமணி என கூறினார் ஆம் பருத்திவீரன் திரைப்படத்தில் பிரியாமணி முத்தழகு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பதிலாக வாழ்ந்து இருப்பார்.
என்னுடைய படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு அவருடைய ரெஃபரன்ஸை தான் நான் அதிகமாக சொல்லுவேன் அந்த அளவிற்கு அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருந்திருக்கும் அதுவும் மதுரை ஸ்லாங்கில் செம்மையாக பேசி இருப்பார் எனவும் கூறி உள்ளார். இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.