இவருக்கு நடிக்கவே தெரியல.. நடிகர் சரத்குமாரை கண்டப்படி திட்டிய பிரபல நடிகை.! கடைசியில் நடந்த ட்விஸ்ட்.

sarathkumar
sarathkumar

உடம்பை நன்றாக முறுகேற்றி வைத்திருக்கும் நடிகர்களுக்கு எப்பொழுதுமே திரை உலகில் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும் அந்த வகையில் தனது உடம்பை கட்டுமஸ்தாக வைத்துக் கொண்டு பட வாய்ப்பை அள்ளியவர் நடிகர் சரத்குமார். இவர் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரம் வில்லன் போன்ற ரோல்களில் நடித்து வந்தவர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

அதன் பிறகு இவருக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. அதன் காரணமாக தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார் தொடர்ந்த சினிமா உலகில் ஓடிய இவர் ஒரு கட்டத்தில் அரசியல் பிரவேசம் கண்டார் அதிலும் வெற்றி கண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்.  சரத்குமாருக்கு தற்பொழுது வயதாகிவிட்டதால் அவருக்கு சினிமா உலகில் ஹீரோக்களுக்கு அப்பாவாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களே பெரிதும் கிடைக்கின்றன.

ஏன் இப்பொழுது கூட இவர் விஜயின் வாரிசு திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது இப்படி திரையுலகில் ஜொலிக்கும் சரத்குமாரை பிரபல நடிகை ஒருவர்  திட்டி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. 1986 ஆம் ஆண்டு சரத்குமாரின் நண்பர் ஒருவர் தெலுங்கில் சமஜம் லோ ஸ்திரீ என்னும் படத்தை தயாரித்து வந்தார் இதில் சுமன் விஜயசாந்தி ஆகியோர் நடித்து வந்தனர்.

இந்த திரைப்படத்தின் பொழுது ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய நடிகர் வராததால் சரத்குமாரை நடிக்க அழைத்துள்ளார் தயாரிப்பாளர் ஆனால் சரத்குமாருக்கு அந்த காலகட்டத்தில் தெலுங்கு தெரியாதாம்.. ஆதலால் அவர் மிகவும் தயங்கினார்.  இருப்பினும் கிடைத்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என அவரும் கடைசியாக ஒத்துக்கொண்டு படத்தில் நடித்தார்.

விஜயசாந்தி உடன் சில காட்சிகளில் நடித்தார் சரத்குமார். இதற்கு இடையில் விஜயசாந்தி அந்த நாளில் வேறு ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னை புறப்பட வேண்டியது இருந்ததால் மிகவும் வேகமாக அந்த காட்சியை படமாக்கி முடிக்க வேண்டும் என கேட்டு இருந்தார். பிறகு சரத்குமாரும் விஜயசாந்தியும் இடம்பெறும் அந்த காட்சி படமாக்கப்பட்டது அதில் சரத்குமார் சரியாக நடிக்கவில்லையாம் ஏற்கனவே நேரமாகிவிட்டதால் சாந்தி டென்ஷனாக இருக்க.

அந்த காட்சி அதிக டேக்குகள் கொண்டிருந்ததால் கோபமடைந்து என்ன சார் நடிக்க தெரியாதவர்களை எல்லாம் கூப்பிட்டு வந்து நடிக்க வைக்கிறீர்களே என கத்தி விட்டாராம் இது சரத்குமாருக்கு பெருத்த அவமானமாக இருந்ததாம் எனினும் அதன் பிறகு ஒரு வழியாக அந்த காட்சியில் நடித்துக் கொடுத்தார் சரத்குமார்.

நடிப்பில் கவனம் செலுத்தி தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்து விட்டார். மீண்டும் ஒரு தடவை சரத்குமார் விஜயசாந்தி ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டிய தருணம் வந்தது அப்பொழுது விஜயசாந்தியிடம் சென்று சரத்குமார் என்னை ஞாபகம் இருக்கிறதா நீங்கள் என்னை ஒரு முறை திட்டி இருக்கிறீர்கள் என கூறினார் அதற்கு விஜயசாந்தி இல்லையே நான் இப்பொழுதுதான் உங்களை முதன்முதலில் பார்க்கிறேன் என கூறி இருக்கிறார் அதன் பிறகு சரத்குமார் அந்த படத்தின் பெயரை சொல்ல..

உடனே விஜயசாந்தி அய்யோ அது நீங்கதானா அன்று என்னுடைய சூழ்நிலை அப்படி இருந்தது வேறு ஒரு படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டியது இருந்ததால் அப்படி கோபத்தில் நடந்து கொண்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என கூறினார் அதற்கு சரத்குமார் பரவாயில்லை உங்கள் இடத்திலிருந்து பார்த்தால் அப்படி நீங்கள் செய்தது சரிதான்.. ஒரு படபிடிப்புக்கு சரியான நேரத்திற்கு செல்லவில்லை என்றால் பெரும் இழப்பு ஏற்படும் என்பது பின் நாட்களில் நான் படங்களில் நடிக்கும் பொழுதே உணர்ந்து கொண்டேன் என சரத்குமார் கூறினாராம்..

vijayasanthi
vijayasanthi