தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீ ரஞ்சனி இவர் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்களில் அம்மா சித்தி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து பேரையும் புகழையும் சம்பாதித்தவர் இவர் அண்மையில் கூட தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனனுக்கு அம்மாவாக நடித்து அசத்தி இருந்தார்.
திருச்சிற்றம்பலம் படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு விதமான புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் நடிகை ஸ்ரீரஞ்சனி காமெடி கதாபாத்திரங்களிலும் சூப்பராக நடித்து வெற்றி கண்டுள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் படத்தில் நடித்தது குறித்து பேசி உள்ளார்.
நடிகை ஸ்ரீரஞ்சனி விஜயின் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் விஜயின் உதயா படத்தில் இணைந்து முதலில் நடித்தார் அதன் பிறகு போக்கிரி படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதது அதன் பிறகு விஜயின் புதிய படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்தப் படத்தில் முதல் காட்சியிலேயே விஜயுடன் ஆட்டோவில் பயணிக்கும் சீன்னில் நடித்தேன்.. அந்த படம் திரையில் வெளியிடப்பட்டது நான் திரையரங்கிற்கு போய் அந்த படத்தை பார்த்தேன் ஆனால் என்னுடைய காட்சியை அந்த படத்திலிருந்து கட் பண்ணி விட்டார்கள்.. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு வருத்தமாக இருந்தது என கூறினார்.
சினிமா உலகில் படத்தின் நீளம் அதிகமாக இருந்தால் சில காட்சிகளை வெட்டி எடுத்து விடுவார்கள் மேலும் ஒரு சில விறுவிறுப்பு காட்சிகள் கம்மியாக இருந்தால் கூட அந்த காட்சியை எடுத்து விடுவார்கள். அப்படி ஸ்ரீ ரஞ்சனி விஜய் உடன் நடித்த காட்சியும் எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறி ரசிகர்கள் அவரை ஆறுதல் படுத்தி வருகின்றனர்.