துணிவு திரைப்படத்தின் “ஷேர்” மட்டுமே இத்தனை கோடியா.? அஜித் கேரியரில் இதுதான் உச்சம்..

thunivu
thunivu

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ அஜித்குமார். இவர் படங்கள் பெரிய அளவு பிரமோஷன் செய்யப்படவில்லை என்றாலும் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கிறது அந்த வகையில் அண்மையில் இவர் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்கள் நல்ல வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் வெற்றிநடை கண்டு வருகிறது.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பேங்கில் நடக்கும் முறைகேடுகளை எடுத்துரைக்கும் ஒரு படமாக இருந்தது அதேசமயம் இதில் ஆக்சன், காமெடி என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடுகிறது அதன் காரணமாக துணிவு படம் அனைத்திடங்களிலும் வசூல் அள்ளி வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் மட்டுமே 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில் உலக அளவில் சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருக்கிறது. வெகு விரைவிலேயே அஜித்தின் துணிவு திரைப்படம் 300 கோடியை தொடும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது இதனால் அஜித்தும் சரி, துணிவு சம்பந்தமும் சரி சந்தோஷத்தில் இருந்து வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படத்தின் ஷேர் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அஜித்தின் கேரியரில் முதல் முறையாக 100 கோடிக்கு மேல் ஷேர் கிடைத்துள்ள திரைப்படம் துணிவு தான் என கூறப்படுகிறது. இத்துடன் நின்று விடவில்லை இன்னமும் சில கோடிகளை அள்ளும் என படக்குழு நம்பி இருக்கிறது.

thunivu
thunivu

துணிவு வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் ஏகே 62 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடிக்க உள்ளார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். இந்த படம் மிகப்பெரிய action படம் என சொல்லுகின்றனர். ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவரவில்லை.